

இது போக அடுத்ததாக இயக்குனர் மிஷ்கினின் இயக்கத்தில் சைக்கோ படத்தில் நடிகர் உதயநிதி ஸ்தாலினுடன் நடித்து வருகுறார். இந்நிலையில் இவரது ஐந்தாவது படமாக ஒரு பெரிய படம் சிக்கியுள்ளது. நடிகர் தனுஷ் சென்ற ஆண்டு இயக்கிய பா பண்டி படத்தை அடுத்து இரண்டாவதாக இயக்க உள்ள படத்தில் அதிதி ராவ் ஹைதாரி தான் ஹீரோயின்.

இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாக உள்ளது. தேனாண்டாள் ஸ்டூடியோஸ் தயாரிக்க உள்ள இந்த படத்தில் நாகர்ஜுனா, எஸ்.ஜெ.சூர்யா, சரத்குமார் மற்றும் ஸ்ரீகாந்த் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளது. ஷான் ரோல்டன் இசையமைக்க உள்ளார்.