

இந்நிலையில் அடுத்ததாக பிரேம்குமார் இயக்கத்தில் த்ரிஷா ஜோடியாக நடித்த ரொமான்டிக் படமான தொண்ணூற்றி ஆறு படம் அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது. இவரது இருபத்தி ஐந்தாவது படமான சீதக்காதி படம் ஆக்டொபரில் வெளியாவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அடுத்ததாக இவர் யாருமே எதிர்பாராத ஒரு இயக்குனருடன் சேர்ந்துள்ளார்.

அவர் வேறு யாரும் இல்லை. சிம்புவை வைத்து வாலு மற்றும் சீயான் விக்ரமை வைத்து ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தர் தான் அவர். விஜய் சான்றுடன் விஜய் சேதுபதி சேரும் இந்த ஆக்ஷன் படத்தை வீரம் படத்தை தயாரித்த விஜய ப்ரொடக்ஷன் நிறுவனத்தார் தயாரிக்க உள்ளனர். இந்த படம் பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளது.