சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் நூற்றி அறுபத்தி ஐந்தாவது படத்தை பீட்சா ஜிகர்தண்டா மற்றும் இறைவி புகழ் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கி வருவது அனைவரும் அறிந்த விஷயமே. இந்த படத்தில் ரஜினியின் ஜோடியாக இடையழகிகள் த்ரிஷா மற்றும் சிம்ரன் நடிக்க, இவர்கள் தவிர மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாஸுதீன் சித்திக்கி, மெகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.



மூன்று மாதங்களாக ஷூட்டிங் நடந்து வரும் இந்த படத்தின் டைட்டிலும் மோஷன் போஸ்டரும் இன்று மாலை வெளியானது. சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை பேட்ட என்று பெயரிட்டுள்ளனர்.



அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு கல்லூரி ஹாஸ்டல் வார்டானாகவும் இரவு நேரத்தில் ஒரு டானாகவும் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினி எந்திரன் படத்தில் கிளிமஞ்சாரோ பாடலில் வருவது போல தாடி வைத்த கெட்டப்பில் வர உள்ளார். மோஷன் போஸ்டர் மூலமாகவே ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறார் கார்த்திக் சுப்பாராஜ். 


Find out more: