இந்த படத்தின் மூன்றாம் ஆண்டு அனிவர்சரியின் பொது ராஜா தனது அடுத்த படம் தனி ஒருவன் டூ என்றும் இது ஜெயம் ரவியின் இருபத்தி ஐந்தாவது படம் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தான் முதல் பாகத்தில் நடித்த மஹிமா வேடத்தில் மீண்டும் நடிப்பார் என்று கூற பட்டது.
மேலும் இன்னொரு நாயகியாக சயிஷா நடிப்பார் என்று வதந்திகள் வந்த நிலையில் இப்பொழுது இன்னொரு வதந்தி வந்துள்ளது. அது என்ன என்றால் தனி ஒருவன் டூ படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்க காஜல் அகர்வாலை அணுகியுள்ளனர் பட குழுவினர் என்பது தான். பார்க்கலாம் ரவியின் இரண்டாம் ஜோடி காஜலா சாயிஷாவா என்று.