இந்நிலையில் தான் இவரது இமேஜை மொத்தமாக மாற்றி தலைகீழாக திருப்பி போட வந்தது மஹாநடி படம். இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கிய இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் பழம்பெரும் நடிகை சாவித்ரியாக நடித்திருந்தார். இந்த படத்தில் கீர்த்தி தான் நடிக்க போகிறார் என்றதுமே இவரது தொடரை படத்தின் நடிப்போடு ஒப்பிட்டு இவரை அனைவரும் கலாய்த்து மீம்ஸ் போட்டும் வந்தனர்.
ஆனால் மஹாநடி படம் வெளியான பிறகு அனைவரின் வாயடைக்கும் விதமாக கீர்த்தி சுரேஷ் நடித்து கலக்கி விட்டார். நடிகை சாவித்ரியாகவே வாழ்ந்ததாக அனைவரும் கீர்த்தியை பாராட்டினார். இந்நிலையில் கீர்த்திக்கு பிரபல பெண்கள் பத்திரிகையான ஜெ.எப்.டபுள்யூ மேகஸின் கீர்த்தி சுரேஷுக்கு தென்னிந்தியாவின் சென்சேஷன் என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது கீர்த்தியின் மஹாநடி நடிப்புக்காக. அடுத்ததாக கீர்த்தி நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை சாமி ஸ்கொயர் வெளியாக உள்ளது.