

தனது க்யூட்டான அழகாலும் செக்சியான இடுப்பழகாலும் ரசிகர்களை கட்டி போட்டு வைத்திருக்கும் த்ரிஷா சமீப காலமாக நயன்தாரா பாணியில் ஹீரோயின் வேடத்திற்கு முக்கியத்துவமுள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அரண்மனை டூவில் டூ பீஸ் பிகினி அணிந்தும் வருவார் என்னை அறிந்தாள் புடவையில் பாந்தமாகவும் வருவார் மோஹினி பேயாகவும் வருவார் என த்ரிஷா கலக்கி வருகிறார்.

இந்நிலையில் த்ரிஷா தனது தோழிகளுடன் துபாய் சென்றுள்ளார். அங்கே ஒரு டால்பினுடன் கொஞ்சி குலவியபடி போட்டாக்களை தனது சமூக வலைதள அக்கவுண்டுகளில் பதிவேற்றியுள்ளார். அதில் கண்டதும் காதலை எப்பொழுதும் நம்புங்கள் என்ற வாசகத்துடன் க்யூட்டாக த்ரிஷா டால்பினுடன் கொஞ்சி மகிழ்வது போல உள்ளது அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

த்ரிஷா அடுத்ததாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஜோடியாக 96 படத்தில் ஒக்டோபர் நான்காம் தேதி திரையில் தோன்ற உள்ளார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக பேட்ட படத்திலும் திரிஷா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.