

ரொம்ப நாள் கழித்து இப்பொழுது தான் விதியுட் ஜமாவால் ஜோடியாக ஹிந்தியில் மகேஷ் மஞ்சரேக்கர் இயக்கி வரும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே ஸ்ருதி ஹாசன் சினிமாவை விட தனது காதலில் தான் குறியாக இருக்கிறார். லண்டன் நடிகர் மைக்கேல் கார்சேளை காதலிக்கும் அவர் எப்பொழுதும் மும்பையிலோ அல்லது லண்டனிலோ மைக்கேலுடன் தான் இருக்கிறார்.

இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் அடுத்ததாக தனது இசை திறமையை லண்டனில் உள்ள பிரபலமான நெட் என்ற ஹோட்டலில் கான்செர்ட் நடத்தி வெளிக்காட்டி உள்ளார். இவரது சொந்த கம்போசிஷனில் உருவான இந்த பாடல் அனைவரையும் ஈர்த்ததோடு மட்டுமின்றி இனிமேல் ஸ்ருதி ஹாசன் அடிக்கடி இது போன்ற இசை கான்செர்ட்களிலும் ஈடுபடுவர் என்று கூறியுள்ளார்.