

இவரது இயக்கத்தில் வந்த படமான பூஜை சிங்கம் த்ரீ ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை. இந்நிலயில் நாளை இவரது படமான சாமி ஸ்கொயர் வெளியாக உள்ளது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் வந்த படமான சாமியின் இரண்டாம் பாகமான இந்த படத்தில் சீயான் விக்ரம் ஆறுச்சாமி மற்றும் ராமசாமி என ரெட்டை வேடங்களில் நடிக்க அவருக்கு ஜோடிகளாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர்.

முதல் பி பாகத்தில் வில்லன் பெருமாள் பிச்சையாக நடித்த கோட்டா சீனிவாச ராவின் மகன் ராவண பிச்சையாக பாபி சும்மா இந்த படத்தில் நடித்துள்ளார். முதல் பாகத்தில் இருந்த இடுப்பழகி த்ரிஷா மற்றும் காமெடியன் விவேக் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜின் இசை இல்லை இந்த படத்தில்.இருந்தாலும் சாமி ஸ்கொயர் மீதான எதிர்பார்ப்பு குறையாமல் உள்ளது. பார்க்கலாம் ஹரி மீண்டும் ஹிட் கொடுப்பாரா என்று.