

இந்நிலையில் ராஷ்மிகாவின் அடுத்த படமும் ரிலீசுக்கு தயாராகி விட்டது. ராஷ்மிகாவின் அடுத்த படமான தேவதாஸ் இந்த வாரம் செப்டம்பர் இருபத்தி ஏழாம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் ராஷ்மிகா நாணி ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்துல நாகார்ஜுனா மற்றும் ஆகான்ஸா சிங்கும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ப்ரமோஷனின் போது சமீபத்தில் பத்திரிகையாளர்கள் இவரை சுற்றி வளைத்து இவரது பிரேக்கப் பற்றி கேள்வி கேட்டனர். ஆனால் ராஷ்மிகாவோ நான் இங்கே வந்திருப்பது எனது அடுத்த படமான தேவதாஸ் பற்றி பேச மட்டுமே தவிர ரக்ஷித் உடனான பிரேக்கப் பற்றி பேச அல்ல என்று படாரென்று பதில் அளித்து ஷாக்கடித்தார்.