

முதல் பாகத்தின் ஹீரோவான ஆறுச்சாமியை முதல் பாகத்தின் வில்லனான பெருமாள் பிச்சையின் மகனான ராவண பிச்சை பழிக்கு பழியாக போட்டு தள்ள தனது தந்தை ஆறுச்சாமியை கொன்ற ராவண பிச்சை மற்றும் அவனது அண்ணன்கள் மஹேந்திர பிச்சை மற்றும் தேவேந்திர பிச்சை ஆகியோரை ஆறுச்சாமி மகன் ராமசாமி பழிவாங்குவதே சாமி ஸ்கொயர் படத்தின் கதை.

வெளியான முதல் நாளில் இருந்தே நெகட்டிவ் ரிவ்யூக்கள், மற்றும் த்ரிஷா மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் இல்லாத சறுக்கல்கள், எண்பதுகளின் திரைக்கதை என எவ்வளவோ நெகட்டீவ்கள் இருந்தாலும் கூட சாமி ஸ்கொயர் படம் மூன்றே நாட்களில் சென்னையில் இரண்டரை கோடி வசூல் செய்துள்ளது மேலும் தமிழ்நாடு முழுவதும் சேர்த்து கிட்டத்தட்ட இருப்பது கோடி வசூல் செய்து சூப்பர்ஹிட் ரிசல்ட்டை நோக்கி சென்று கொண்டுள்ளது.

இதன் மூலமாக சாமி சீரீஸ் மூலமாக சூர்யாவுக்கு சிங்கம் சீரீஸ் போல சீயானுக்கும் ஹிட் கொடுத்து காப்பாற்றியுள்ளார் இயக்குனர் ஹரி.