

இதே படம் தான் நடிகை சுனைனா நாயகியாக தமிழில் அறிமுகமான படமும் கூட. இந்த படமும் சூப்பர்ஹிட்டானது. இந்த ஹிட் படத்தை அடுத்து இதே ஜோடி மீண்டும் மாசிலாமணி படத்திலும் ஒன்றாக நடித்தனர். இந்நிலையில் காதலில் விழுந்தேன் வெளியாகி சரியாக இன்றோடு பத்து ஆண்டுகள் ஆனா நிலையில் இந்த ஹிட் ஜோடி மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளது.

அறிமுக இயக்குனர் சச்சின் தேவின் இயக்கத்தில் நகுல் மற்றும் சுனைனா மீண்டும் எரியும் கண்ணாடி என்ற படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளனர். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜ இசையமைக்க வைரமுத்து பாடல்கள் இயற்றவுள்ளார். பார்க்கலாம் ஹிட் ஜோடி மீண்டும் இனைந்து காம்பேக் ஹிட் கொடுப்பார்களா என்று.