இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக மெகா பவர்ஸ்டார் ராமச்சரன் ஜோடியாக அவரது பன்னிரண்டாவது படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அடுத்ததாக ஒரு பெரிய ஹிந்தி படம் இவருக்கு மாறியுள்ளது. அது சென்ற ஆண்டு வெளியான தெலுங்கு சூப்பர்ஹிட் படமான அர்ஜுன் ரெட்டியின் ரீமேக்காகும்.
இந்த படத்தில் கியாரா அத்வானி ஷாஹித் கபூரின் ஜோடியாக நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் ஆக்டொபரில் தொடங்க உள்ளது. ஆனால் அதற்கு முன்னரே ஷாஹிதும் கியாராவும் ஜோடி சேர்ந்து விட்டனர்.
காதலன் படத்தின் சூப்பர்ஹிட் பாடலான ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி பாடலின் ரீமிக்சில் கியாராவும் ஷாஹிதும் படு நெருக்கமாக சூடேற்றும் விதமாக முரட்டு குத்தாட்டம் போட்டுள்ளனர். கியாராவின் செக்சியான உடைகளும் கவர்ச்சி நடனமும் இந்த பாடலை ஹிட் ஆக்கியுள்ளது.