இந்நிலையில் அவர் சமீபத்தில் ஒரு சிறப்பு காட்சியில் அவரது இல்லத்தில் வைத்து திரையிட்டு காண்பிக்கப்பட்ட மணிரத்னம் அவர்களின் புதிய படமான செக்க சிவந்த வானம் படத்தை பாத்து ட்விட்டரில் புகழ்ந்து தள்ளியுள்ளார். செக்க சிவந்த வானம் படத்தில் ரஹ்மான் இசை இணையற்றது ,சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு மாஸ்டர் க்ளாஸ் என்றும், ஒரு மணிரத்னம் ரசிகனாக காலரை தூக்கி விட்டு கொண்டு கைதட்டி ரசித்ததாகவும் இது மணிரத்னம் எனும் சிறந்த இயக்குநரின் க்ளாஸிக் காம்பேக் என்றும் மகேஷ் பாபு குறிப்பிட்டுள்ளார்.
ஸ்பைடரும் சென்ற ஆண்டு செப்டம்பர் இருபத்தி ஏழாம் தேதி தான் வெளியானது மற்றும் அதுக்கும் சந்தோஷ் சிவன் தான் ஒளிப்பதிவு என்பதும் ஒரு ஒற்றுமை.