நடிகர் விஜய் தேவரகொண்டா இந்த ஆண்டின் தொடக்க்கத்தில் நடிகை சாவித்ரி பயோபிக்கான மஹானடியில் ஒரு புகைப்பட கலைஞராக எண்பதுகளின் இளைஞனாக நடிகை சமந்தாவின் ஜோடியாக நடித்திருந்தார்.



இந்த படத்தை அடுத்ததாக விஜய் தேவரகொண்டா ஹீரோவாக ரஷ்மிக்கா ஜோடியாக நடித்த கீதா கோவிந்தம் படம் நூற்றி இருபத்தி ஐந்து கோடிகள் வசூலித்து மாபெரும் பிளாக்பஸ்டர் ஆனது.



இந்நிலையில் அடுத்ததாக மீண்டும் ஒரு பயோபிக்க்கில் விஜய் தேவரகொண்டா நடிக்க உள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. அது என் டி ஆர் பயோபிக் ஆகும். பாலகிருஷ்ணா ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் என் டி ஆரின் இளம் ரசிகராக விஜய் தேவரகொண்டா நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. 


Find out more: