

இந்நிலையில் நான்கு ஆண்டுகள் கழித்து அதே சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் மீண்டும் தல அஜித் நடிப்பில் வெளியாக உள்ள படம் விஸ்வாசம். இந்த படத்தில் தலயின் ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்க உள்ளார். இந்த படம் தல மற்றும் சிவாவின் கூட்டணியில் வீரம் வேதாளம் மற்றும் விவேகம் ஹாட்ரிக் வெற்றியை அடுத்ததாக வரும் நான்காவது படமாகும்.
மேலும் தல ஜோடியாக நயன்தாரா பில்லா ஏகன் மற்றும் ஆரம்பம் படங்களை அடுத்ததாக நடிக்கும் நான்காவது படம் கூட இதுவே. பேட்ட படம் பொங்கலுக்கு வர உள்ளதாக வதந்திகள் வரவே விஸ்வாசம் தள்ளி போகலாம் என்று அரவ ஆரம்பித்த நிலையில் விசுவாசம் படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழர் திருநாள் விசுவாசத்துடன் என்று பதிவிட்டு விஸ்வாசம் பொங்கல் வெளியீடு தான் என்று உறுதி செய்துள்ளார்.
வீரம் படத்தை அடுத்து மீண்டும் கிராமத்து ஹீரோவாக தல களமிறங்கும் விஸ்வாசம் வீரத்தை விட பெரிய பிளாக்பஸ்டராக ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.