

இந்த படத்தை விக்ரம் பிரபு பெரிதாக நம்பியிருந்தார். ஆனாலும் ஒர்க் அவுட் ஆகவில்லை. சிவாஜியின் பேரன் என்ற அடையாளத்துடன் கும்கி படத்தில் அறிமுகம் ஆன இவருக்கு கும்கி அரிமா நம்பி வெள்ளக்கார துரை சிகரம் தோடு தவிர அணைத்து படங்களும் படு தோல்வி அடைந்தன.

இந்நிலையில் அடுத்ததாக இவரது நடிப்பில் ஒரு படம் ரெடியாகி விட்டது. இயக்குனர் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு மற்றும் ஹன்சிகா மொதவானி நடித்துள்ள துப்பாக்கி முனை படம் தான் அது. இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் விக்ரம் பிரபு என்கவுண்டர் போலீசாக நடித்துள்ளார். பார்க்கலாம் விக்ரம் பிரபுவை இந்த போலீஸ் படமாவது காப்பாற்றுமா என்று. இந்த படத்திற்கு சென்சார் யூ சர்டிபிகேட் கொடுத்துள்ளனர் டிசம்பரில் படம் வெளியாக உள்ளது.