

பொங்கலுளுக்கு வெளியாகும் விஸ்வாசம் ஷூட்டிங் முடியும் முன்னரே தலையின் அடுத்த படம் பற்றிய செய்திகள் கசிய ஆரம்பித்து விட்டன. தலையின் அடுத்த படத்தை இயக்க உள்ளது சதுரங்க வேட்டை மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோத்.

இவரது இந்த படத்தை மறைந்த கனவுக்கன்னி ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க இந்த படம் பாலிவுட் படமான பிங்கின் ரெமேக்காகும். இதற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ளாராம். ஏற்கனவே ரஹ்மானும் அஜித்தும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பவித்ரா மற்றும் வரலாறு படங்களில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.