

தமிழில் சமீபத்தில் நடித்த தொண்ணூற்றி ஆறு படமும் ஐம்பது கோடிகளுக்கு மேல் வசூல் செய்து த்ரிஷாவை குஷி ஆக்கியுள்ளது. தன பதினெட்டு ஆண்டு சினிமா கேரியரில் முதன் முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜோடியாக கார்த்திக் சுப்பாராஜ் இயக்கியுள்ள பேட்ட படத்திலும் நடித்து முடித்து விட்டார்.

இந்நிலையில் த்ரிஷா நடித்து வெளிவராமல் இருக்கும் படமான கர்ஜனை படத்தின் டீசர் தீபாவளிக்கு பின்னர் வெளியாகும் என்று அப்படத்தின் இயக்குனர் சுந்தர் பாலு அறிவித்துள்ளார். கௌரவ கொலைகளின் பின்னணியில் ஒரு கிராமத்தில் நடக்கும் இந்த ஆக்ஷன் படம் ஹிந்தியில் ஹிட்டான என்.ஹெச் பத்து படத்தின் ரீமேக்காகும். த்ரிஷா இந்த படத்தில் ஒரு ஆக்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் த்ரிஷாவுடன் அமித் பார்கவ மற்றும் வம்சி கிருஷ்ணா உடன் நடித்துள்ளனர்.