

இதனை தொடர்ந்து முருகதாஸ் இயக்கிய படமான கத்தி படமும் தனது படமான மூத்தகுடியின் திருட்டு வடிவம் என்று கூறினார். இந்த குற்றச்சாட்டுகளில் இவரது பக்கம் நியாயம் இருந்தாலும் கூட இவருக்கு நியாயம் கிடைக்கவில்லை. கடைசியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தான் இவருக்கு அறம் படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகம் ஆகவைத்தார்.

இதனை தொடர்ந்து இவர் இப்பொழுது ஜெய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க ஒரு படத்தை எடுத்து வருகிறார். அதனை தொடர்ந்து அவர் பழங்குடியினருக்காக பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டா வாழ்க்கையை வைத்து படமெடுக்க உள்ளதாக அறிவித்தார். இந்நிலையில் இன்று பா.ரஞ்சித் ஹிந்தியில் இதே பிர்சா முண்டா வாழ்க்கையை வைத்து படமெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் திரை உலகமே மீண்டும் ரஞ்சித் கோபி நாயனாரின் கனவை உடைக்க வந்துவிட்டாரா என்று அதிர்ச்சியில் உள்ளனர்.