

சமீபத்தில் தான் இவரை தேடி பெரிய பெரிய இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் படங்கள் வர தொடங்கின. ஒரு மாதம் முன்பு வெளியான இயக்குனர் மணிரத்னத்தின் மல்டி ஸ்டாரர் படமான செக்க சிவந்த வானம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் அருண் விஜயின் மனைவியாக நடித்து கலக்கியிருந்தார்.

இதனை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக வாடா சென்னை படத்தில் கேட்ட வார்த்தைகள் பேசி பரபரப்பை கிளப்பினார். இதனை தொடர்ந்து இவர் கிராமத்திலிருந்து வந்து இந்திய கிரிக்கட் அணியில் இடம்பெற்று தன கனவை நனவாகி தனது தந்தைக்கும் கிராமத்துக்கும் பெருமை சேர்க்கும் ஒரு பெண்ணாக நடித்துள்ள கனா படம் டிசம்பரில் வெளியாக உள்ளது.

இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்க நெருப்புடாஅ புகழ் அருண்ராஜா காமராஜை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தையாக நடிகர் சத்யராஜ் நடிக்க தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.