

இதில் மீண்டும் ரஜினி சைன்டிஸ்ட் வசீகரன் மற்றும் ரோபோ சிட்டி என இரு வேடங்களில் நடிக்க ரோபோ சிட்டியின் ஜோடி ரோபாவாக கவர்ச்சி நாயகி ஏமி ஜாக்சனும் அதிரடி வில்லன் காக்கை மனிதனாக அக்ஷய் குமாரும் நடித்துள்ளனர். ஐநூறு கோடி ரூபாய் பொருட்செலவில் தாயாராகியுள்ள இந்த டூ பாய்ண்ட் ஓ படம் நவம்பர் இருபத்தி ஒன்பதாம் தேதி வெளியாக உள்ளது.

இப்பொழுது இந்த படத்தின் இண்டர்வெல்லின் பொது சிம்பு நடிப்பில் சுந்தர்.சி இயக்கியுள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீசர் திரையிட படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு படங்களையும் லைகா நிறுவனம் தான் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் மேகா ஆகாஷும் கேத்ரீன் தெரேசாவும் நாயகிகளாக நடித்துள்ளனர்.