மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் சீதக்காதி. இந்த படம் விஜய் சேதுபதியின் இருபத்தி ஐந்தாம் படமாகும். செக்க சிவந்த வானம் மற்றும் தொண்ணூற்றி ஆறு ஆகிய இரு படங்களின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து இந்த படம் வர இருப்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு மேலும் பெருகியுள்ளது.



சீதக்காதி படம் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் பாலாஜி தரணீதரன் காம்பினேஷனில் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தை அடுத்து இரண்டாவதாக இணையும் படம். இந்த படத்தில் இயக்குனர்கள் மகேந்திரன் மற்றும் மவுலி முக்கிய வேடங்களில் நடிக்க எழுபத்தி ஐந்து வயதான நாடக கலைஞர் அய்யா ஆதிமூலம் என்ற வேடத்தில் நடிக்கும் விஜய் சேதுபதியின் ஜோடியாக நடிகை அர்ச்சனா நடிக்க ரம்யா நம்பீசன் மற்றும் காயத்ரி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.



இயக்குனர்கள் பாரதிராஜா மற்றும் ராம் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் வில்லனாக நடித்திருப்பவர் அறிமுக நடிகர் சுனில். இவர் நடிகர் வைபவ்வின் அன்னான் ஆவார். இவரது நடிப்பு சிறப்பாக உள்ளதாக அனைவரும் பாராட்டி உள்ளதால் இப்பொழுதே வைபவ் வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் சுனிலுக்கு வாய்ப்பு கொடுக்குமாறு கேட்டுள்ளாராம். சீதக்காதி படம் டிசம்பர் இருபதாம் தேதி வெளியாக உள்ளது. 


Find out more: