நடிகர் சிவகார்த்திகேயன் முதன் முறையாக தயாரிப்பில் இறங்குகிறார். தனது தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸின் முதல் படமான கானா வரும் டிசம்பர் இருபத்தி ஒன்றாம் தேதி வெளியாகவுள்ளது.



இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கிராமத்திலிருந்து வந்து கிரிக்கட் ஆர்வத்துடன் போராடி தேசிய அணியில் இடம்பெறும் ஒரு பெண்ணாக நடித்துள்ளார். இந்த படத்தில் நம்ம கட்டப்பா சத்யராஜ் ஐஸ்வர்யாவின் தந்தையாக நடித்துள்ளாராம். இந்த படத்தை இயக்கியுள்ளவர் நெருப்புடா புகழ் அருண்ராஜா காமராஜ்.



இவர் சிவகார்த்திகேயனின் கல்லூரி காலம் தொட்டே நண்பர் ஆவார். மேலும் இப்பொழுது வெளியாகியுள்ள தகவல் என்னவென்றால் படத்தில் சிவகார்த்திகேயனும் ஐஸ்வர்யாவை ஊக்குவித்து வளர்த்து விடும் ஒரு சிறப்பான கிரிக்கட் கோச் ஆகா நடித்துள்ளார் என்பது தான். 


Find out more: