இதில் கலந்து கொண்டு பேசிய பட குழுவினரின் சுவாரசியமான பேச்சுகளில் சில இதோ. நடிகர் பாபி சிம்ஹா ஜிகர்தண்டாவில் அண்ணாமலை வசனம் பேசி சொதப்புவதை செய்து காண்பித்தார். அனிருத் மற்றும் கார்த்திக் சுப்பாராஜ் இருவரும் எப்பேர்ப்பட்ட தலைவர் வெறியர்கள் என்பதை நிரூபித்தனர்.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பேசுகையில் "ஒரு பெரிய ஆள எதிர்த்து நின்னா தான் நாமளும் பெரிய ஆகா முடியும், ஆமா நான் வில்லன் தான்" என்று கூறி பேட்டையில் தான் வில்லன் என்று உடைத்தார்.
தங்க தாரகை த்ரிஷா வந்த போது இது அவரது கனவு படம் என்றும் அவரிடம் தான் திரையுலகுக்கு வந்து பதினாறு ஆண்டுகள் ஆனதை பற்றி கேட்டதற்கு அங்கு ஒருவர் நூற்றி அறுபத்தி ஐந்தாவது படம் முடித்திருக்கிறார், நான் வெறும் பதினாறு ஆண்டுகள் தான் நடித்திருக்கிறேன் என்று சூப்பர்ஸ்டாரை காட்டினார்.
சூப்பர்ஸ்டார் பேசுகையில் விஜய் சேதுபதியை மஹா நடிகன் என்றும் சிறந்த மனிதன் என்றும் கூறினார். திரிஷா அப்போ பார்த்த மாதிரியே இப்போவும் இருக்காங்க என்றும் சிம்ரன் என்ன மந்திரம் போட்டு வச்சிருக்காங்களோ சிம்ரன் எனக்கு ஜோடின்னு சொன்னதும் மொத்த யூனிட்டும் சந்தோஷமாயிட்டாங்க என்றார்.
பேட்ட ஒரு கொண்டாட்டமான படமாக வந்திருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் வேண்டாம் என்பது போல அமைந்தது இந்த விழா. பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.