இதனை அடுத்ததாக நிவேதா பெத்துராஜுக்கு அடுத்த ரிலீஸ் ரெடியாகி கொண்டுள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபுவின் எட்டாவது படமான பார்ட்டி தான் அது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் டீமானிடைசேஷன் காலகட்டத்தில் ஒரு பார்ட்டியின் போது பழைய நோட்டுகளை வைத்து கொண்டு கஷ்டப்படும் ஒரு கும்பலை மையமாக வைத்து வெங்கட் பிரபு எடுத்துள்ள இந்த படம் பல நாட்களாக வெளிவராமல் உள்ளது.
இந்த படத்தில் கயல் சந்திரன், மிர்ச்சி ஷிவா, ஜெய், ஷாம், ஜெயராம், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் மற்றும் நாசர் நடிக்க, படு செக்சியான நாயகிகளாக நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா ஷெட்டி மற்றும் ரெஜினா கசான்றா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இப்பொழுது தான் சென்சார் போர்டு யூ/ஏ சர்டிபிகேட் வழங்கியுள்ளது. இந்த படத்தில் நிவேதா பெத்துராஜ் அதிரடியாக டூ பீஸ் பிகினி உடையில் கவர்ச்சி தாண்டவம் ஆடியுள்ளதாக கூறப்படுகிறது.