நாஞ்சில் சம்பத் ஒரு காலத்தில் மிக பிரபலம். அதிமுகவில் முக்கியமான அங்கமாக இருந்தார். இதன் பின்னர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அவர் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் கூட்டணியில் சேர்ந்தார். ஆனால் அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி தொடக்கம் ஆனபின்னர் அவர்களை விட்டு விலகினார்.



இன்னும் பேச்சாளராக உள்ளார். சமீபத்தில் இவர் கமல் ஹாசன் தனது மக்கள் நீதி மையம் கட்சி நாற்பது தொகுதிகளில் தேர்தலில் போட்டியிடுகின்றார் ஆனால் ரஜினியோ கட்சி ஆரம்பிக்கிறேன் என்று கூறி இன்னும் கட்சி தொடங்கவும் இல்லை எதுவும் மக்களுக்கு நல்லதும் செய்யவில்லை.



அதே நேரத்தில் கமல் ஹாசன் கஜா புயல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டார் ஆனால் ரஜினியோ அங்கும் போகவில்லை. இதில் இருந்தே ரஜினியின் சுயரூபம் தெரிகிறது என்று நாஞ்சில் சம்பத் ரஜினிகாந்தை சாடியுள்ளார். 


Find out more: