

படத்தில் அவருக்கு வேலை நாற்பது நிமிடங்கள் மட்டுமே என்றாலும் அவர் தான் படத்தின் மையம் என்றும் அவரது சிறப்பான நடிப்பை அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அவர் அடுத்த ஆண்டு தெலுங்கில் மெகாஸ்டார் சிரஞ்சீவியின் சை ரா நரசிம்ம ரெட்டி படத்தின் மூலமாக கால் பதிக்க உள்ள நிலையில் அடுத்ததாக மலையாளத்திலும் இறங்க உள்ளார்.

மலையாளத்தில் இயக்குனர் சனில் கலத்தில் இயக்கத்தில் விஜய் சேதுபதி அறிமுகமாக உள்ளார். சத்யம் சினிமாஸ் தயாரிக்க உள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஜெயராமும் நடிக்கவுள்ளார்.