

சமீபத்தில் வெளியான கவசம் படத்தில் காஜலுடன் சேர்ந்து நடித்தும், வர உள்ள F2 படத்தில் தம்மனாவுடன் நடித்தும் இரண்டாம் ஹீரோயின் நிலைக்கு போய்விட்டார் மெஹரீன். இந்நிலையில் இவரை வைத்து சுதீர் பாபுவுடன் ஒரு படம் எடுப்பதாக கூறி அட்வான்ஸ் கொடுத்த தயாரிப்பாளர் ஒருவருடன் சண்டை போட்டு வருகிறார்.

தயாரிப்பாளாரோ சுதீர் இல்லாததால் கல்யாண் தேவ் மற்றும் ஒரு அறிமுக நாயகி வைத்து எடுக்கலாம் என்று மெஹரினிடம் அட்வான்ஸை கேட்க, உங்களால் நான் நான்கு படங்களை இழந்தேன், என் கால்ஷீட் வீணாக்க பட்டது அதனால் அட்வான்ஸ் திருப்பி கொடுக்க முடியாது என்று சண்டையிட்டு வருகிறார்.