

அறிமுக இயக்குனர் டெல்லி பிரசாத் இயக்கத்தில் இவர் நடிக்க உள்ள இந்த படம் துக்ளக் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு சீதக்காதி மற்றும் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் இயக்குனர் பாலாஜி தரணீதரன் வசனம் எழுத தொன்னூற்றி ஆறு புகழ் கோவிந்த வசந்தா இசையமைக்கவுள்ளார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி அரசியல்வாதியாக நடிக்க போகிறாராம். ஜூன் மாதத்தில் துக்ளக் ஷூட்டிங் தொடங்கும் என்று கூறப்படுகிறது, மேலும் இப்படத்தை லலித்குமார் தயாரிக்கிறார்.