

மேலும் தமிழில் சூர்யா ஹீரோவாக நடித்து வரும் அதிரடி ஆக்ஷன் படமான காப்பான் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வந்தார் லால்.

இந்த படத்தில் சூர்யா கமேண்டோவாக நடிக்க மோகன்லால் இந்திய பிரதமராக சந்திரகாந்த் வர்மா என்ற வேடத்தில் நடித்துள்ளார். நேற்றோடு தனது பகுதியை நடித்து முடித்து கொடுத்துவிட்டார் லால். காப்பான் படம் சுதந்திர தினத்தன்று திரைக்கு வரும் என்று பேசப்படுகிறது.