நடிகை மாளவிகா மோஹனன் கேமராமேன் மோஹனனின் மகள் ஆவார். இவர் மலையாளத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக பட்டம் போலெ படத்தில் அறிமுகமானார். இதனை அடுத்ததாக இரானிய இயக்குனர் மஜித் மஜிதியின் இயக்கத்தில் பியாண்ட் தி க்ளவுட்ஸ் என்ற படத்தில் நடித்து புகழ் பெற்றார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த பேட்ட படத்தில் சசிகுமார் ஜோடியாக பூங்கொடி என்ற வேடத்தில் நடித்து பெயர் பெற்றார்.

இதனை அடுத்ததாக தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக ஹீரோ என்ற படத்தில் அறிமுகமாகவுள்ளார். இதில் இவர் இசையமைப்பாளராக நடிக்க விஜய் தேவரகொண்டா பைக் ரேஸராக நடிக்க உள்ளார்.