நடிகை அபர்ணா பாலமுரளி இரண்டு ஆண்டுகள் முன்னர் வெளியான எட்டு தோட்டாக்கள் படத்தில் தமிழில் அறிமுகம் ஆனார். மலையாளத்தில் மஹேஷிண்டே பிரதிகாரம் படத்தில் நாயகியாக நடித்த இவருக்கு எட்டு தோட்டாக்கள் நல்ல தொடக்கத்தை கொடுத்தாலும் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை.

அடுத்ததாக ஓராண்டு கழித்து இந்த வருடம் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சர்வம் தாள மாயம் படத்தில் நடித்தார்.
இதனால் கவனிக்கப்பட்ட இவருக்கு அடுத்ததாக பெரிய வாய்ப்பாக சூர்யா ஜோடியாக இறுதி சுற்று புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு அமைந்துள்ளது, இதனால் அபர்ணா பாலமுரளி குஷியில் உள்ளார்.