சூர்யா, சாய்பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடிக்க  செல்வராகவன் இயக்கிய என்.ஜி.கே திரைப்பட இசை வெளியீட்டு விழா  சென்னையில் சமீபத்தில் நடந்தது. விழாவில் நடிகர் சூர்யா பேசியபோது, அரசியல் ரத்தம் சிந்தா யுத்தம், யுத்தம் ரத்தம் சிந்தும் அரசியல் என்று கூறுவார்கள். 

Image result for ngk

செல்வராகவனோடு படம் செய்கையில் ஒவ்வொரு நாளும் புது பட ஷூட்டிங் போல இருந்தது.  ஒவ்வொரு விஷயத்திற்கும் மெனக்கெட்டு வேலை செய்யும் செல்வராகவனின் எழுத்து மற்றும் படைப்பிற்கும் அவரது சிந்தனைக்கும் அவரது படங்கள் மீதும் எனக்கு தீராத காதல் உண்டு.

Image result for ngk

செல்வாவின் இயக்கத்தில் முழுவதும் ஈடுபடுத்திக்கொண்டு  நடித்திருக்கிறேன் இந்த படத்தில். இந்த படம் எங்கள் அனைவரின் கேரியரில் ஒரு மைல்கல்லாக அமையும். நான் மீண்டுமொரு படத்தில் செல்வராகவனுடன் பணிபுரிய விரும்புகிறேன், வேறு கதை எழுதும்பொழுது கண்டிப்பாக என்னை கூப்பிடவேண்டும் என்றார் சூர்யா. 


Find out more: