

இந்நிலையில் அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் தயாரிப்பாளரும், அஜித்தின் நண்பர்களில் ஒருவருமான போனிகபூர் அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

போனிகபூர் வாழ்த்து டுவிட்டில், தல அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்களையும் குடும்பத்தையும் கடவுள் காப்பாற்றுவார், உடல்நலத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க வாழ்த்துக்கள். இந்த ஆண்டு மகிழ்ச்சிகரமான ஆண்டாக இருக்கும் என்று போட்டிருந்தார்.