

இந்த படத்தில் கதாநாயகனாக ஐஸ்வர்யாவை ஒருதலையாக காதலிப்பவராக அறிமுகம் ஆனவர் தான் தர்ஷன். இவரது நடிப்பில் அந்த படத்தில் இருந்த பாடலான ஒத்தையடி பாதையில பாட்டும் செம்ம ஹிட்.

இதனை தொடர்ந்து இவர் ஹீரோவாக வர இருக்கும் இரண்டாவது படம் தான் தும்பா. அறிமுக இயக்குனர் ஹரிஷ் ராம் இயக்கும் இந்த படத்தில் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நாயகியாக அறிமுகமாக, தும்பா அனிருத்தின் இசையில் மே 17 ஆம் தேதி வெளியாக உள்ளது.