

ஆனால் திடீரென எடை கூடி யாரும் எதிர்பாராத பொழுது துபாய் சென்று செட்டிலாகி விட்டார். இவர் ஒரு இன்ஜினியரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே வசித்து வருகிறார், இந்நிலையில் சண்டக்கோழி 2 படத்தில் கூட இவரது எடை காரணமாக இவரது கதாபாத்திரம் தூக்கப்பட்டது.

சமீபத்தில் இவரது புகைப்படம் மலையாள இயக்குனர் ஒருவரோடு இருப்பது போல வெளியாகவே மீரா மீண்டும் நடிக்க வருகிறார் என்று ரசிகர்கள் பேச தொடங்கினர், மேலும் கண்டிப்பாக மீண்டும் நடிக்க வரவேண்டும் என்று வேண்டுகோளும் வைத்துள்ளனர். பார்க்கலாம் மீண்டும் மீரா ஜாஸ்மின் ரசிகர்களுக்காக நடிக்க வருவாரா என்று.