

ஒரு பக்கம் ரவிக்குமார் ராஜேந்திரனின் சைபை படம் ஷூட்டிங் நடக்க, இன்னொரு பக்கம் பி.எஸ்.மித்ரனின் ஹீரோ ஷூட்டிங் நடக்க அடுத்ததாக, தனது குருநாதர் பாண்டிராஜின் படத்தையும் ஆரம்பிக்க உள்ளார் சிவகார்த்திகேயன்.

மெரினா மற்றும் கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களை தன்னை வைத்து எடுத்த பாண்டிராஜுடன் அவரது கடைக்குட்டி சிங்கம் வெற்றிக்கு பின்னர் சிவகார்த்திகேயன் சேரும் இந்த படம் மே எட்டாம் தேதி ஷூட்டிங் தொடங்க உள்ளது, இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயன் தங்கையாக நடிக்க உள்ளார்.