

கல்பதரு பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முடிந்து தொழில்நுட்ப பணிகள் கூட முடிவுக்கு வந்து ரிலீசுக்கு தயாராகி விட்டது.இப்பொழுது சுட்டு பிடிக்க உத்தரவு பட குழுவினர் இந்த படம் வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அறிவிப்போடு கூடி ரிலீஸ் தேதியுடன் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.இந்த படத்தில் விக்ராந்த் ஜோடியாக காதல் கண் கட்டுதே மற்றும் ஏமாளி புகழ் அதுல்யாரவி நடித்திருக்கிறார், மேலும் இயக்குனர்கள் மிஷ்கின் போலீஸாகவும் சுசீந்திரன் கொள்ளையராகவும் நடித்துள்ளனர்.