

ஆனால் அவர் போன பின்னர் எடுத்த எதுவும் தேறவில்லை, மேலும் இந்த படத்தில் சந்தானம் இல்லாத நிலையில் நான்கு காமெடி நடிகர்கள் இருந்தும் காமெடி வேஸ்ட். மிஸ்டர் லோக்கல் வெளியான அன்று நடிகர் அருண்விஜய் ஒரு ஸ்மைலியை தனது டுவிட்டர் அக்கவுண்டில் பதிவிட்டார்.

இது மிஸ்டர் லோக்கல் படத்தை கிண்டல் செய்வதாக ரசிகர்களால் எடுத்து கொள்ளப்பட்டது. இதன் பின்னர் அருண்விஜய் மீண்டும் ஒரு டுவிட்டில் விளக்கம் அளித்துள்ளார். அருண் விஜயின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகவுள்ளது என்றும் அந்த ட்வீட் அது பற்றிய டுவீட் தான் என்று கூறி தான் தன்னுடைய பணியில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தி வருவதாக கூறியுள்ளார்.