

மேலும் இப்படத்தினை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ மற்றும் வயாகாம் 18 ஸ்டுடியோ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் 2020ஆம் ஆண்டு ஏப்ரலில் இந்த படம் ரிலீஸ் செய்ய போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் மற்ற நடிகர் நடிகையர், நாயகி, இசை அமைப்பாளர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய செய்திகள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.