

இதற்காக நான் கடன் பட்டிருக்கிறேன். என் இளைய சகோதரர் குடும்ப வாழ்க்கையை அமைத்து கொண்டதற்காக வாழ்த்துக்களை பகிர்ந்த ஊடக நண்பர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் திருமணம் குறித்த சில வதந்திகள் வருகிறது. இப்போதைக்கு அந்தமாதிரி திட்டங்கள் எதுவும் இல்லை, ஏதேனும் இருந்தால் குறித்த நேரத்தில் குறித்த வழியில் தெரிவிப்பேன்.

தொழில் ரீதியாகவும் சில படங்களுடன் தொடர்பு படுத்தி வதந்திகள் வருகிறது. ஒரு சில தயாரிப்பாளர்களை கேஷுவலாக சந்திக்கும் அவசியம் ஏற்பட்டது. அதனால் இந்தச் சந்திப்புகளை படங்கள் என்று வதந்திகள் வெளிவருகின்றன.

இது என் ரசிகர்களையும் தவறான வழிக்கு இட்டு செல்கிறது. வதந்திகளை நம்பி அது நடக்காது போகும் போது ரசிகர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். படங்கள் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறேன் என்றால் அதை தயாரிப்பு நிறுவனம் முறையாக அறிவிக்கும்.நடிகர் சிம்பு இவ்வாறு கூறியுள்ளார்.