விஷ்ணுவிஷால் நடிப்பில் வெளியான ராட்சசன், சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது எழில் இயக்கி வரும் ஜகஜால கில்லாடி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் விஷ்ணுவிஷால் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா குட்டாவுடன் நெருக்கமாக உள்ள செல்பி வெளியிட்டுள்ளார்.

புகைப்படத்தில் வேறு தகவலை பதிவு செய்யாததால் நெட்டிசன்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.ஜூவாலா குட்டாவுடன் இணைந்து விஷ்ணுவிஷால் விளையாட போகிறாரா,
விஷ்ணு அடுத்த படத்தில் ஜூவாலா குட்டா நாயகியா,ஜூவாலா குட்டாவை விஷ்ணு காதலிக்கிறாரா உள்பட பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.