

இந்நிலையில் சிம்புவும், ஹன்சிகாவும் ஜீப்பில் செல்வது போன்ற காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பின்போது சிம்பு, ஹன்சிகா அன்யோன்யமாக இருந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பிரிந்த காதலர்களான சிம்பு-ஹன்சிகா மீண்டும் இணைவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜமீல் இயக்கி வரும் மஹா படத்தில் ஸ்ரீகாந்த், தம்பிராமையா, நாசர், சாயாசிங் நடித்து வருகின்றனர். ஜிப்ரான் இசையில் இந்த படம் வளர்ந்து வருகிறது.