
நடிகர், வசனகர்த்தா, நாடக நடிகர் கிரேசி மோகன் காலமானதை அடுத்து திரையுலகமே சோகத்தில் மூழ்கியிருந்தது. திரைலகினர் கிரேஸி மோகனுக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் இரங்கலை தெரிவித்தனர்.
இந்நிலையில் தனுஷ், செல்வராகவன் தந்தை, இயக்குனர் கஸ்தூரி ராஜா தனது சமூக வலைத்தளத்தில் கிரேஸி மோகன் என்பதற்கு பதிலாக லூஸ்மோகன் என்று பதிவு செய்திருந்தார். லூஸ்மோகன் நகைச்சுவை நடிகர் என்பதால் அவர் குழப்பம் அடைந்திருப்பது தெரிகிறது.
இந்நிலையில் அவருடைய தவறை சுட்டிக்காட்டியவுடன் தவறுக்கு வருத்தம் தெரிவித்த கஸ்தூரி ராஜா, தவறை சுட்டிக்காட்டியவருக்கும நன்றி தெரிவித்து கொண்டார்.