"மெட்ராஸ்", "கபாலி" படங்களின் மூலம் தமிழ்த் தரையுலகில் வெளிச்சத்திற்கு வந்தவர் நடிகர் லிஜீஷ். இடைவெளி இல்லாமல் அடுத்தடுத்து படங்கள் நடித்து வந்தாலும் ரசிகர்கள் மனதில் நங்கூரம் பாய்ந்தது போல் நிலைத்து நிற்கும்படியான கதாபாத்திரத்திற்காக காத்திருந்தார்.

Image result for

இந்த சமயத்தில் தான் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய "பரியேறும் பெருமாள்" வெளியானது. ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் மனங்களையும் உலுக்கிய இப்படத்தின் கேள்விகளுக்கான மூல காரணியாக வரும் கதாபாத்திரமான சொக்கலிங்கமாக வாழ்ந்திருந்தார் லிஜீஷ். அதன் பிறகு ஆர்யா நடிப்பில் வெளியான "கஜினிகாந்த்" படத்தில் சாயிஷாவை ஒருதலையாக காதலிக்கும் போலீஸ் அதிகாரியாக மிரட்டியிருந்தார்.



இப்போது புதுமுக இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கி இருக்கும் "இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு" படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கும் லிஜிஷ், "இதற்கு முன் நான் நடித்த படங்களை விட எனக்கு இந்தப்படம் மிக முக்கியமான படம். எனக்கு மட்டுமல்லாது தமிழ்ச் சமூகத்திற்கும் இந்தப் படம் முக்கியமான படமாக இருக்கும். தமிழ் சினிமாவில் ஒரு புதிய பாய்ச்சலாக இந்தப் படம் நிச்சயம் அமையும். என்னை மட்டுமல்லாமல் இந்த படத்தில் என்னோடு பணியாற்றிய நடிகர் தினேஷ், நடிகை ஆனந்தி, இயக்குநர் அதியன் ஆதிரை, ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார், இசையமைப்பாளர் தென்மா ஆகியோரையும் இந்தப் படம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்" என்று நம்பிக்கையோடு கூறுகிறார்.


Find out more: