இயக்குநருக்கு மட்டுமல்லாது நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் முதல் படம் என்பதால், அனைவரும் ஒன்றிணைந்து ஒரு தரமான யதார்த்த காதல் சினிமாவை படைத்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பை கடலூர், சிதம்பரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற இடங்களில் நடத்தியிருக்கிறார்கள்.
ஆகாஷ், ஹரிருத்ரன், ஜானகி, ராஜேஷ்பாலா, அருண்குமார் மற்றும் பலர் நடித்திருக்கிறாரகள்.
மாயபிம்பம் பல டைரக்டர்கள் பார்த்து பிரமித்த சினிமா.காதல்,மைனா வரிசையில் மீண்டும்.. காதலின் வலியை சொல்லும் எதார்த்த படம் மாயபிம்பம். கே.ஜே.சுரேந்தர் இப்படத்தை எழுதி இயக்கியதோடு 'செல்ஃப் ஸ்டார்ட் ப்ரொடக்ஷன்' சார்பில் தயாரித்துமிருக்கிறார். புகைப்படம் - எட்வின் சகாய், இசை - நந்தா, படத்தொகுப்பு - வினோத் சிவகுமார், கலை - மார்ட்டின் தீட்ஸ், நடனம் - ஸ்ரீக்ரிஷ், ஒலி - ஷான்சவன், டிசைன் - சந்துரு. உலகமெங்கும் V.T சினிமாஸ் வெளியீடு.