

ஒவ்வொரு பையனோட முதல் ஹீரோயினும் ஒரு டீச்சராத் தான் இருப்பாங்க.. எனக்கு என்னோட நாலாங்கிளாஸ் “நிர்மலா டீச்சர்”, ஒவ்வொருத்தருக்கும் இப்படி ஒரு டீச்சரோ பேர் கட்டாயம் மனசில இருக்கும். நம்மளோட அந்த டீச்சர் பள்ளிக்கூடத்துல நடக்குற நடக்க வேண்டிய விசயங்களை எனக்கென்னன்னு இல்லாம எதிர்த்து நின்னு அத்தனை பேருக்கு முன்னாடி கம்பீரமா கேள்வி கேட்கும் போது, மனசுல தோணும்.. “இவங்கதான் என்னோட சூப்பர் ஹீரோயினி”- ன்னு அவங்கதான் இந்த டீச்சர் “ராட்சசி” கீதாராணி.
உங்களப் பொண்ணுப் பார்க்க வரட்டுமான்னு எந்த சூதுவாதும் இல்லாம டிரைலர்ல கேட்குற அந்த குட்டிப் பையனாத் தான் நாம எல்லோரும் இந்த கீதா டீச்சரைப் இருப்போம். காலேஜ் கூட எத்தனை வயசானாலும் எதாவது ஒரு வகையில படிக்க முடியும் ஆனா, ஸ்கூல் லைப் ஒருதடவைதான், தியேட்டரவிட்டு வெளிய வரும் போது அந்த நினைவுகள தரும் இந்தப் படம்.