
தமிழ்நாடு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடன இயக்குனர்கள் நடன கலைஞர்கள் சங்கத் நிர்வாகிகளுக்கான தேர்தல் தி. நகரில் உள்ள நடன கலைஞர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் நடன இயக்குனர் ஷோபி பால்ராஜ் தலைமையிலான அணியினரும் நடன இயக்குனர் தினேஷ் குமார் அணியினரும் போட்டியிடுகின்றனர்.
கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள் வெளி வர எல்லோருடனும் பேசி வருகிறோம். இதற்கு ஆர்ப்பாட்டம், அதட்டல் செய்ய முடியாது. சட்டப்பூர்வமாக மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், இளம் வயதிலிருந்தே தமிழுக்காக பாடுபடுபவன. அதில் இருந்து நானும் மாறமாட்டேன். இந்தி திணிப்பு விவகாரத்தில் தமிழ்நாட்டில் நிலைப்பாடு ஒரு போதும் மாறாது. அது ஒருபோதும் நடக்காது என்றும் தெரிவித்தார்.