
சென்னை: ஆடை படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்திருப்பது தொடர்பாக நடிகை அமலாபால் பேசியுள்ளார். நடிகை அமலாபால் நடிப்பில் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஆடை. இந்தப் படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் படத்தில் அமலாபால் உடம்பில் ஒட்டுத்துணியில்லாமல் நிர்வாணமாக நடித்துள்ளார்.
இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை அமலா பாலிடம் பாலிவுட்டில் இருந்து வாய்ப்பு வர வேண்டும் என்பதற்காக நிர்வாணக் காட்சியில் நடித்தீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அமலா பால் அதைப்பற்றியெல்லாம் யோசிக்கவில்லை. ஆடை படத்தை பார்த்துவிட்டு இந்தி டைரக்டர்கள் அழைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்றும் அவர் கூறினார். இதுவரை தமிழ் சினிமாவில் எந்த நடிகையும் நிர்வாணமாக நடித்ததில்லை. தற்போது ஆடை படத்தில் அமலா பால் துணிந்து அந்த வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.