

வளரவே இல்லை அதற்குள் சம்பளத்தை ஒரேயடியாக உயர்த்துவதா என்று ரஷ்மிகாவை திரையுலகினர் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் ரஷ்மிகா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அவரிடம் சம்பள உயர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் தெளிவான பதில் அளித்துள்ளார்.
நான் நடிக்க வந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. நான் வளர்ச்சி அடையும்போது சம்பளத்தை உயர்த்துவது நியாயம் தானே. நீங்கள் ப்ரொமோஷன் மற்றும் ஊதிய உயர்வு கேட்க மாட்டீர்களா?. நானும் அப்படித் தான் என்று செய்தியாளரை பார்த்து தெரிவித்தார் ரஷ்மிகா மந்தனா. அதன் பிறகு யாரும் அவரிடம் சம்பளம் பற்றி எதுவும் கேட்கவில்லை.